Breaking News

பள்ளிவாசல்துறை ரெட்பானாவில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல்துறை ரெட்பானா கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வீடு அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 இந்த வீடு அமைக்கும் வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீட்டுக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்தத் திட்டம் பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக வீடுகளைக் கட்ட முடியாத குடும்பங்களுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுப்பதுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவும் காணப்படும்.


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் இத்திட்டத்தின் பயனாளிகள் அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments