JobVibe.lk - Sri Lanka Job Portal

குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராமத்தில் வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குறிஞ்சிபிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வீடு அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.


சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்தத் திட்டம் பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக வீடுகளைக் கட்ட முடியாத குடும்பங்களுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுப்பதுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவும் காணப்படும்.


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்  றிகாஸ் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  அரச உத்தியோகத்தர்கள்  மேலும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال