Breaking News

புத்தளம், பாலாவி அஷ்ரப் பாதை கொங்கிரீட் பாதையாக திறந்து வைப்பு!.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் எம். ஆர். சன்சைன்  வேண்டுகோளின் பேரில், புத்தளம் பிரதேச சபையின் தலைவர் ரதிகவின் நிதி ஒதுக்கீட்டீன் கீழ் புத்தளம், பாலாவி பிரதேசத்தின் அஸ்ரப் பாதை சுமார் 2மில்லியன் ரூபா செலவில்  கொங்கிரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.



இப்பாதை நேற்று (09) மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளாரும், புத்தளம் மாநகர சபையின் உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன்  கலந்து சிறபித்தார்.



இதேவேளை இது போன்று பல பாதைகள் கொங்கிரீட் பாதைகளாக அபிவிருத்தி செய்யப்பட இருப்பதாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதுர்தீன் தெரிவித்தார்.











No comments