Breaking News

பெண்களை பொருளாதார ரீதியில் பெண்களைப் வலுப்படுத்தி சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

பொருளாதார ரீதியாக வலுப்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கான சிறுதானிய (Millet) உற்பத்தியை மேம்படுத்துதல் எனும் இரட்டை நோக்கங்களை முன்னிறுத்தும் ஒரு முன்முயற்சியாக "ஆரோக்கியமும் வளமும்" (Health and Wealth) எனும் கருப்பொருளின் கீழ் கற்பிட்டி செடோ சிறி லங்காவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (19) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் கற்பிட்டி பிரதேசத்தில் சிறந்த பெண் முயற்சியாளரான திருமதி மஞ்சுளா மலேசியா வர்த்தக மாநாட்டில்  கலந்து கொண்டு சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டமைக்காக இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.


இத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகளைத் தொடரும் வகையில் "We Millet" (வி மில்லட்) அறக்கட்டளையும் தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது.


நெல் மற்றும் கோதுமை அல்லாத இந்தப் புன்செய் பயிர்கள், நமது பாரம்பரிய உணவுப் பண்பாட்டின் அங்கமாக இருந்தபோதிலும், காலப்போக்கில் புறக்கணிக்கப்பட்டன. தற்போது, சோளம், தினை, கம்பு, வரகு, சாமை, பனிவரகு போன்ற இந்தச் சிறுதானியங்கள், குறைந்த நீர்ப்பாசனத்தில் வளரக்கூடிய 'Super Food' களாக உலகளவில் மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரசு மற்றும் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் ( vitamin b complex)  சிறந்த மூலங்களாகும்.


மேலும், இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோய் நிர்வாகத்திற்கு உதவுவதோடு, இதய நலத்தையும் செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றன.


இதன் அடிப்படையில், பெண் விவசாயிகளை மையமாக கொண்டு சிறுதானியப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் இந்த ஒருங்கிணைந்த முயற்சி, கிராம பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தையும், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் வளத்தையும், நுகர்வோருக்கு சத்தான ஆரோக்கிய பாதுகாப்பையும் வழங்கும் ஒரு முழுமையான சமூக-பொருளாதார-சுற்றுச்சூழல் மாதிரியாகத் திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.







No comments