Breaking News

அமெரிக்காவை நம்ப முடியாது.

தாக்குதலை எதிர்பார்த்து தயாராக இருக்கின்ற நிலையில் அமெரிக்கா தாக்குதல் நடாத்துவதில்லை. கெரில்லா பாணியில் எதிர்பாராத தருணத்தில் திடீர் தாக்குதல் நடாத்திவிட்டு வீர முழக்கம் பேசுவதுதான் அமெரிக்காவின் கடந்தகால வரலாறு. 


இஸ்ரேலுடனான பன்னிரண்டு நாட்கள் நடைபெற்ற போரின்போது நாங்கள் இதில் கலந்துகொள்வதில்லை என்று அறிவித்துவிட்டு திடீரென பன்னிரெண்டாவது நாள் ஈரானின் அணு உலைகள்மீது B-2 Spirit விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் நடாத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


எனவே அமெரிக்கா நெற்று இரவு தாக்குதல் நடாத்தும் என்ற பதட்டமான அறிகுறிகளை காண்பித்துவிட்டு பின்பு திடீரென அகிம்சை பற்றி பேசியதானது நம்பக்கூடியதொன்றல்ல. 


ஈரானை சுற்றியுள்ள நாடுகளின் அழுத்தம்தான் இதற்கு காரணம் என்றால், அவர்களது அழுத்தத்தை காசா விடயத்தில் அமெரிக்காவை அழுத்தி இருக்கலாம். 


முகம்மத் இக்பால்




No comments