Breaking News

கற்பிட்டி புதுக்குடியிருப்பு அல் ஹூதா பாலர் பாடசாலை புதுப் பொலிவுடன் திறக்கப்படுகின்றது

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி புதுக்குடியிருப்பு அல் ஹூதா பாலர் பாடசாலை மீண்டும் புதுப் பொலிவுடன் எதிர்வரும் 2026 ஜனவரி 19 ம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்ட உள்ளது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதுக்குடியிருப்பு உயர் பீட உறுப்பினர் என். பீ. எம் நவாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற உள்ளது 


இத் திறப்பு விழாவின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ் கலந்து கொள்வதுடன் கௌரவ அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் அத்தோடு சிறப்பு அதிதியாக எம் எம் எஸ் ஏ சுவிஸ் பைசல் கலந்து சிறப்பிக்க உள்ளனர் 


கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக மூடப்பட்டிருந்த அல் ஹூதா பாலர் பாடசாலை புதிதாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் முயற்சி ஊடாக மீண்டும் புதுப் பொலிவு பெற்று திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments