கற்பிட்டி தில்லையூர் மீனவர் சங்கத்தின் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமாக கற்பிட்டி தில்லையூர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) தில்லையூர் மீனவ சங்கத்தின் கட்டிடத்தில் சங்கத்தின் தலைவர் சபுருல்லாஹ் தலைமையி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில், தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ் எம்.அரூஸ் , ஐயூப் பாடசாலையின் பிரதி அதிபர் என்.பீ.எம் நவாஸ், புதுக்குடியிருப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் என் எப் நாஜியா தில்லையூர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் அன்வர்தீன் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் பெற்றார்களும் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments