Breaking News

ஈரானை தாக்குவதென்றால் அமெரிக்காவின் குறுக்குவழி என்ன ? இதற்கு வெனிசுவேலா ஓர் எடுத்துக்காட்டு.

எந்தவொரு நாட்டின்மீதும் நேர்மயாக போரிட்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் வெற்றியடைந்ததில்லை. அதாவது ஈரான் போன்ற நாடுகள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் தாக்குவர். இது அவர்களது நேர்மையை காட்டுகிறது. 


ஆனால் ஈரான்மீது போர்தொடுக்க அமெரிக்கா துணிந்தால், ஈரானிய இராணுவ மற்றும் உயர் மட்டங்களுக்குள் CIA மற்றும் மொசாட்டின் ஆழமான ஊடுருவல் இருக்கும். இதற்காக ஏராளமான பணம் வழங்கப்பட்டிருக்கும். இதனைத்தான் குறுக்குவழி என்று குறிப்பிடுவது.   


கடந்த 3ம் திகதி வெனிசுவேலா நாட்டுக்குள் புகுந்து அந்த நாட்டின் அதிபரை கடத்துவதற்கான நடவடிக்கையின்போது ஜனாதிபதி மதுரோவின் பாதுகாப்புப் பிரிவினர் உட்பட ஏராளமான இராணுவத்தினர் துல்லியமாக குறிவைக்கப்பட்டனர். 


அத்துடன் வான் எதிர்ப்பு நிலைகள் அனைத்தும் அமெரிக்க விமானங்களால் அழிக்கப்பட்டபின்புதான் ஜனாதிபதி கடத்தப்பட்டார். அவ்வாறு வான் எதிர்ப்பு சாதனங்கள் செயற்பாட்டில் இருக்கும்போது இலகுவில் அதனை அழிக்க முடியாது.   


வெனிசுவேலா நாட்டின் இராணுவ கட்டளையிடும் உயர் அதிகாரிகளுக்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டு வான் எதிர்ப்பு சாதனங்கள் செயற்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணமாகும்.  


இதுபோன்று ஈரான் மீது தாக்குதல் நடத்துவதென்றால் அங்குள்ள வான் பாதுகாப்பு நிலைகள்தான் முதலில் குறிவைக்கப்படும். அதன் பின்புதான் ஏவுகணைத் தளங்கள் அழிக்கப்படும். 


ஏற்கனவே ஈரானுக்குள் CIA, மொசாட் ஆகியவற்றின் ஊடுருவல் பலமாக இருந்தது. பல உயர் இராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் கொல்லப்பட்டனர். 


இதில் வேடிக்கை என்னவென்றால், ஈரான் இராணுவத்துக்குள் ஊடுருவியுள்ள உளவாளிகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஒரு மொசாட்டின் உளவாளி என்பது பின்புதான் கண்டுபிடிக்கப்பட்டது.


எனவேதான் அமெரிக்கா ஒருபோதும் நேர்மையாக போருக்கு செல்வதில்லை. அவ்வாறு சென்றால் அமெரிக்காவினால் வெற்றியடைய முடியாது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments