Breaking News

உண்மையை மறைத்த வெனிசுவேலா அரசு

கடந்த 03.01.2026ம் திகதி கெரில்லா முறையில் வெனிசுவேலாவில் அமெரிக்க தாக்குதல் நடாத்தி வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை கடத்தும்போது கொல்லப்பட்ட கியூபா நாட்டை சேர்ந்த பாதுகாப்புப் படையினரின் 32 உடல்கள் தாயகம் திரும்பின. அதனால் கியூபாவில் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 


ஜனாதிபதி மதுரோவுக்கு பாதுகாப்பு வழங்கிய கியூபா படையினர்கள் அனைவரும் அமெரிக்க படையினர்களின் தாக்குதல்களினால் கொலை செய்யப்படவில்லை. இவர்கள் அருகிலிருந்து சுடப்பட்டுள்ளதாக அறிக்கைகைள் கூறுகின்றன. 


அதாவது அமெரிக்க டெல்டா படையினரின் தாக்குதலில் ஒட்டுமொத்த 32 கியூபா படையினரை அருகில் இருந்து சுடுவதற்கு வாய்ப்பில்லை. 


இது அமெரிக்காவின் டொலருக்கு விலைபோனவர்களின் துரோகச் செயலினாலேயே கியூபா படையினர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 


முகம்மத் இக்பால்




No comments