வருடாந்த பரிசளிப்பு விழா.
எம்.யூ.எம்.சனூன்
கொழும்பு கொம்பனி வீதி இஸ்லாமிய கல்வி நிலையத்தின் அஹதிய்யா பாடசாலை மற்றும் பைத்துல் ஹிக்மா மத்ரசா ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (25) காலை 08.30 இலிருந்து நண்பகல் 12 மணி வரை கொழும்பு -10 மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் கைருல் இஸ்கன்டர் பின் முஹம்மது யூசுப் கலந்து கொள்ள உள்ளார்.
கௌரவ அதிதிகளாக, முன்னாள் கொழும்பு மாநகர சபையின் மேயரும், சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய தலைவருமான அல்ஹாஜ் ஒமர் காமில், கொம்பனி வீதி அஹதிய்யாவின் முன்னாள் ஆசிரியர் ஏ.சீ.எம்.முபாரக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

No comments