Breaking News

மிக விமரிசையாக இடம்பெற்ற கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணிக்க விழாவின் "தில்லை மலர்" நூல் வெளியீடு.

எம்.யூ.எம்.சனூன் 

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் மாணிக்க விழா சிறப்பு மலரான "தில்லை மலர்" நூல் வெளியீட்டு வியாழக்கிழமை (22) காலை 10 மணிக்கு பாடசாலையில் அதிபர் எஸ். எம்.அரூஸ தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது. 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் மற்றும் உளவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் கலந்து கொள்ள இருந்தும் தவர்க்க முடியாத காரணத்தால் அவருக்கு கலந்து கொள்ள முடியவில்லை.


கௌரவ அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஜவாத் கலந்து கொண்டார்.


சிறப்பு அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.முஸம்மில், புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரைக்கார், முன்னாள் புத்தளம் வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர்களான எம்.ஏ.எம்.எம். ஜவாத் மரைக்கார், இஷட்.ஏ.சன்ஹீர், முன்னாள் கற்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.யூசுப் மௌலவி,  கவிஞரும், எழுத்தாளருமான "புத்தளம் மரைக்கார்", கவிஞரும், ஆசிரியருமான முஹம்மது சுஹைப் உள்ளிட்ட அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 


இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையை தினகரன் நாளிதழ் வழங்கி இருந்தது.


நிகழ்வில் வரவேற்புரையினை பாடசாலை அதிபர் எஸ்.எம்.அரூஸ் நிகழ்த்தினார். "தில்லை மலர்" நூல் அறிமுகத்தினை கவிஞரும், எழுத்தாளருமான "புத்தளம் மரைக்கார்" நிகழ்த்தினார். 


நூலின் முதல் பிரதியை, பாடசாலையின் முதல் அதிபர் மர்ஹூம் எஸ்.எம்.ஜுனைத் அவர்களது பாரியார் திருமதி  எஸ்.எம்.ஜுனைத், அதிதிகளுக்கு வழங்கி வைத்ததையடுத்து அதிபரினால் சிறப்பு பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.


முன்னாள் புத்தளம் வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர்களான எம்.ஏ.எம்.எம். ஜவாத் மரைக்கார், இஷட்.ஏ.சன்ஹீர் ஆகியோரின் விஷேட உரைகளும் இடம்பெற்றன.

 

1982 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆவணச் சிறப்பு மலராக வெளியிடப்படும் "தில்லை மலர்" நூல் கற்பிட்டி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.


















No comments