ஈரான் – சவூதி அரேபியா: எந்த நாட்டில் சர்வாதிகாரம் – ஜனநாயகம் உள்ளது ? மேற்கு நாடுகளின் பிரச்சாரம் என்ன ?
ஈரானில் மக்களுக்கு சுதந்திரம் இல்லையென்றும், அங்கு இஸ்லாமிய அடக்குமுறை ஆட்சி நிகழ்வதாகவும் மேற்கு நாடுகளும், அதன் ஊடகங்களும் உலக மக்களை மூளைச்சலவை செய்துவருகிறது.
ஈரான், மேற்கு நாடுகளுக்கு கொத்தடிமையாக இல்லாமல் தனது இறையாண்மையையும், கௌரவத்தையும் பாதுகாத்துவருகின்ற காரனத்தினாலேயே ஈரானுக்கு எதிராக இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர்.
இத்தனைக்கும் ஈரானிய மக்களுக்கு வாக்குரிமை உள்ளது. அங்கு ஜனாதிபதி, பாராளுமன்றம் (Majles), Assembly of Experts, உள்ளூராட்சிமன்றம் ஆகிய தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கின்றனர்.
அத்துடன் தொழில்சங்க நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடாத்துவதற்கு ஈரானிய மக்களுக்கு முழு உரிமைகளும் உள்ளது.
ஆனால் மேற்கு நாடுகளுக்கு கொத்தடிமையாக இருந்துவருகின்ற சவூதி அரேபிய மக்களுக்கு மேலே கூறப்பட்ட இவ்வாறான எந்தவிதமான உரிமைகளும் இல்லை.
அதிகாரங்கள் அனைத்தும் அரச குடும்பத்திடம் இருக்கின்ற காரணத்தினால், அங்கு தேர்தல்கள் நடைபெறாத நிலையில், எவ்வாறு போட்டியிடுவது ? எவ்வாறு வாக்களிப்பது ?
சவுதியில் உள்ள மக்களுக்கு இருக்கின்ற உரிமையானது நன்றாக சாப்பிடுவதும், தூங்குவதும், உல்லாச பிரயாணம் செல்வதும், விரும்பிய எண்ணிக்கையில் திருமணம் செய்துகொள்வதுமாகும். அதாவது அம்மக்களுக்கு அரசியல் உரிமை இல்லை.
ஈரானைப்போன்று சாதாரணமாக ஒரு மக்கள் பேரணியைக்கூட சவுதியில் நடத்த முடியாது. அவ்வாறு நடத்தினால் அவரது கழுத்துக்கும், உயிருக்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை.
இவ்வாறான நிலையில், ஈரானில் மக்களுக்கு ஜனநாயகம் இல்லாத காரணத்தினால் அங்கு ஆட்சி மாற்றம் வேண்டுமென்று கூறிக்கொண்டு பெரும்தொகை பணத்தினை வாரியிறைத்துக்கொண்டு மேற்கு நாடுகள் சதிகளை செய்துவருகிறது.
உண்மையில், மக்களுக்கு உரிமை வழங்காத சவூதி அரேபியாவானது மேற்கு நாடுகளுக்கு கொத்தடிமையாக இருந்துவருகின்ற காரணத்தினால் அதைப்பற்றி எவரும் பேசுவதில்லை.
ஆனால் சவூதி அரேபியாவுடன் ஒப்பிடுகையில் ஜனநாயக நாடாக விளங்குகின்ற ஈரானில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்துவதற்காக மேற்கு நாடுகளினால் கூறப்படுகின்ற காரணம் மிகவும் தவறானது. அவ்வாறான காரணத்தினால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதென்றால் அது சவூதி அரேபியாவிலேயே ஏற்படுத்த வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments