கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளரை சந்தித்த வர்த்தக சங்கத்தினர்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி நகர வர்த்தகர்கள் வெளியூர் பாதையோர வியாபாரிகளால் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸை கற்பிட்டி பிரதேச சபையில் செவ்வாய்க்கிழமை (13) சந்தித்த கற்பிட்டி வர்த்தக சங்கத்தினர்.
இச் சந்திப்பில் கற்பிட்டி நகர வட்டாரங்களில் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் போது கற்பிட்டி வர்த்தகர்கள் வெளியூர் பாதையோர வியாபாரிகளினால் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடியதுடன் வியாபாரத்தில் ஏற்படும் சவால்கள் அதாவது வியாபாரத்தை நடாத்தும் கடை உரிமையாளர் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான வாடகைப் பிரச்சினை கூலிப் பிரச்சினை போன்ற பல கஷ்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன். இதற்கான உடனடித் த தீர்வும் தவிசாளரால் வர்த்தகர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அதன்படி வெளியூர் வியாபாரிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் தனி இடம் ஒதுக்கி வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிப்பது எனவும் பண்டிகை காலங்களில் இரண்டு நாள் தனி இடம் ஒதுக்கி வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிப்பது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




No comments