தமிழகத்தில் பரிசு பெற்ற இலங்கை மாணவி ஆயிஷா ஸஹ்ரின்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
தமிழக அரசின் ஏற்பாட்டில் சென்னையில் நடை பெற்ற இரு நாள் அயலக தமிழர் தினம் மாநாட்டினை முன்னிட்டு உலகலாவிய ரீதியில் நடத்தப்பட்ட சர்வதேச கதை சொல்லும் போட்டியில் இரண்டாம் இடத்தினை இலங்கையின் திருகோணமாலை த/ கிண்ணியா மகளிர் கல்லுாரியின் ( தேசிய பாடசாலை) 8 வயது மாணவி முஹ்ஸின் ஆயிஷா ஸஹ்ரின் பெற்றுக்கொண்டார்.
அவருக்கான விருதினையும் பணப்பரிசலையும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பொற் கரங்களால் ஞாயிற்றுக்கிழமை (11 ) சென்னை வர்த்தக மைய மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற அயலக தமிழர் தினத்தின் ஆரம்ப விழாவில் போது பெற்றுக் கொண்டார்
இதின் போது தமிழக சிறுபான்மை நலன் மற்றும் புலம் பெயர் தமிழர் நலன் அமைச்சர் ச.மு நாசர் மற்றும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதகிருஷ்ணண் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments