நீர்கொழும்பு கடற்பரப்பில் 621 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
நீர்கொழும்பு கடற்பரப்பில் திங்கட்கிழமை (12) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ஒரு கப்பலால் நீர்கொழும்பு கடற்பரப்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பரப்பில் கைவிடப்பட்ட பதினாறு (16) பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments