புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி 2026 - இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கு 2026 ஆம் புதிய கல்வி ஆண்டு ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை கடந்த 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காஸிமிய்யா வளாகத்தில் நடைபெற்றது.
எனினும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக இந்த நேர்முகப் பரீட்சையில பல மாணவர்கள் கலந்து கொள்ள முடியாமல் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இதனையொட்டி மற்றுமொரு நேர்முக பரீட்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை இம்மாதம் 10ம் திகதி சனிக்கிழமை காலை 09 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது பிறப்புச் சான்றிதழ், பாடசாலைத் தேர்ச்சி அறிக்கை, ஒழுக்கச் சான்றிதழ்கள் மற்றும் திறமைச் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தருமாறு காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி கேட்டுக்கொள்கிறார்.
மேலதிக விபரங்களுக்கு 0712640232 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

No comments