Breaking News

தெற்கு கடற் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பலநாள் மீன்பிடி படகுகள் இரண்டை 11 நபர்களுடன் கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை காவல்துறையினரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நெடுந்தூர  கப்பல்களைப் பயன்படுத்தி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, ஐந்து (05) சந்தேக நபர்களும், போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேலும், அதே கடல் பகுதியில் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பல நாள் மீன்பிடிப் படகும், ஆறு (06) சந்தேக நபர்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


இந்த இரண்டு (02) பல நாள் மீன்பிடிப் படகுகள், போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகள்  மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க கடற்படை எதிர்பார்க்கிறது.




No comments