Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலசோலை கிராமத்துக்கு MUSLIM CHARITY உலர் உணவு உதவி வழங்கியது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

மதுரங்குளி - பாலசோலை கிராமத்தில் வெள்ளப்பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு கிறிஸ்மஸ் கால நிவாரண உதவியாக MUSLIM CHARITY நிறுவனத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது


வெள்ள அனர்த்ததினால் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பு மற்றும் வருமான இழப்புகளுக்கு உள்ளாகி பல்வேறு பொருளாதார பாதிப்புக்களை சந்தித்தனர். அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவியாக முஸ்லிம் சேரிட்டி இலங்கை அமைப்பு இந்த மனிதநேயம் சார்ந்த உதவிகளை வழங்கியது 


முஸ்லிம் சேரிட்டி இயக்குநர் முஜாஹித் நிசார் தலைமையில் நடைபெற்ற இவ் உதவி வழங்கும் நிகழ்வை சமாதான நீதிவானும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் முன்னாள் செயலாளருமான ஏ. எஸ். ஜலீல்  ஒருங்கிணைத்தார்.


முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா, நல்லந்தழுவை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் சமூக முன்னணி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து பங்களித்னர்.


மேலும்  MUSLIM CHARITY இலங்கை அமைப்பு தொடர்ந்து தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்யும் முனைப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












No comments