Breaking News

நிவாரண பணி பகிஷ்கரிப்பை கைவிட்ட கற்பிட்டி கிராம மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் கடந்த வெள்ளிக்கிழமை (19) முதல் இடம்பெற்று வந்த கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அனர்த்தத நிவாரண வேலைத்திட்ட தற்கால பணி விலகல் திங்கட்கிழமை (22) உடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


கற்பிட்டி பிரதேச செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து செவ்வாய்க்கிழமை (23) முதல் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் கிரா,ம உத்தியோகத்தர்கோள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் அனர்த்த நிவாரண  வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு  தீர்மானித்து அரசின் நிவாரண நிதி கொடுப்பனவு மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.







No comments