புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவராக மீண்டும் ரணீஸ் பதூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவராக அடுத்து வரும் நடப்பாண்டுக்கும் தற்போதைய தலைவரும், புத்தளம் மா நகரசபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்த்தீன் அவர்களே தொடர வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் ஏமகனதாக தீர்மானித்துள்ளனர்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (20) சங்க வளாகத்தில் இடம் பெற்றது.
இதன் போது, தலைவர் ரணீஸ் பதூர்தீன் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தையும், நிர்வாகத்தையும் மிகவும் திறம்பட நடாத்தியதை அங்கத்தவர்கள் அங்கு பிரஸ்தாபித்து அடுத்த வருடமும் ரணீஸ் பதூர்தீன் அவர்களே தொடர வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் பொது சபையில் ஏகமனதாக தீர்மானித்தனர்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்கத்தின் காணி உரிமைகள் தொடர்பாகவும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் காரணமாக பழுதடைந்த பாதைகள் புணரமைப்பு, வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட உப்புக்கான இழப்பீடுகளை கோருதல் தொடர்பாக, அனுபவம் வாய்ந்த அவர் தொடர்ந்தும் தலைவராக செயற்படுவது சாலச்சிறந்தது எனவும் அங்கத்தவர்கள் இதன் போது தெரிவித்தனர்.
அங்கத்தவர்களின் இத்தகைய கருத்துக்களை தொடர்ந்து மீண்டும் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவராக ரணீஸ் பதூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments