கற்பிட்டி கூட்டுறவு சங்க இயக்குனர் சபைத் தெரிவு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சபைக்கான 07 உறுப்பினர்கள் தெரிவிற்கான பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) கூட்டுறவு மேம்பாட்டு உதவி ஆணையாளரின் பரிந்துரையின் கீழ் கற்பிட்டி கூட்டுறவு தேர்தல் அதிகாரி எச்.எம்.எச்.ஈ ரத்நாயக்க தலைமையில் கற்பிட்டி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது
இதில் கூட்டுறவு சங்கத்தின் கற்பிட்டி பிராந்திய பொறுப்பதிகாரி கே ஏ.கே சுமேதே மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் சகல கிளைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 64 பொதுச் சபை உறுப்பினர்களில் 63 உறுப்பினர்கள் கலந்து கொண்டன ஒருவர் மாத்திரம் சமூகமளிக்கவில்லை.
கூட்டுறவு தேர்தல் சட்டத்தின் பிரகாரம் கற்பிட்டி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சபைக்கான 07 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அதில் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மூவர் பிரேரிக்கப்பட்டனர். அதில் ஒருவர் வாபஸ் பெற்று விலகிக் கொள்வதாக அறிவித்ததை அடுத்து தேர்தல் இன்றி இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 14 உறுப்பினர்கள் பிரேரிக்கப்பட்டனர். இவர்களுக்கான வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற ஐவர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதன்படி வாக்கெடுப்பின்றி
ஏ.ஆர்.எம் பாஹீம்
எஸ்.ஏ.எம் நிலுபர் ஆகிய இருவரும்
வாக்கெடுப்பின் மூலம்
எஸ் உதயகுமார் ,
ஏ.ஜே.எம் தாரிக்,ஏ.ஏ.எம் பைசல் ஏ.எம் சமீம்,
ஏ.சீ.எம் சலாஹூதீன்
இவர்களில் இருந்து கற்பிட்டி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திங்கட்கிழமை (22) தெரிவு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






No comments