Breaking News

வீட்டுக்குள் இருந்துகொண்டு விமர்சிப்பவர்களே! பெரும்பாலான வேலைகள் நிறைவடைந்துள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கண்டி மாவட்ட பிரதேச துப்பரவு பணி பாரிய சவாலானது.


வீட்டு தளபாடங்கள், மின் உபகரணங்கள், வீட்டு பாவனை பொருட்கள், கைத்தொழில் சாலைகள், தோட்டங்கள் என அனைத்தும் சுரிகள் நிறைந்த குப்பை கழிவுகளாக காட்சியளித்தது.


துர்நாற்றம் நிறைந்த அந்த இடங்களை சுத்திக்கரித்து அவைகளை அகற்றுவது பாரியதொரு சவாலாக இருந்தது.


மக்கள் தூர இடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். காலாதி காலமாக தாங்கள் சேர்த்து வைத்தவைகள் அத்தனையும் குப்பைகளானது அங்குள்ள மக்களின் மனங்களை பெரிதும் பாதித்திருந்தது.


அம்மக்களுக்கு அத்தியவசிய உணவு பொருட்களை வழங்குவதில் தொண்டு நிறுவனங்கள், பள்ளிவாசல், ஜனாசா அமைப்புகள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள் போன்றவைகள் ஈடுபட்டன. 


ஆனாலும் இந்த குப்பை மேடுகளை அகற்றுதல், அதற்காக கனரக வாகனங்களை ஈடுபடுத்துதல் பாரி சவாலாக இருந்தது. சில இடங்களுக்குள் கனரக வாகனங்கள் நுழைய முடியாது, இன்னும் சில இடங்களில் பாதைகள் இல்லை. 


அந்த பிரதேசங்கள் கிழக்கு மாகாணத்தை போன்று சமதரையான பிரதேசங்கள் அல்ல. மேடுகளும், பள்ளங்களும், குழிகளும், குன்றுகளும் நிறைந்த மலைப் பிரதேசங்களாகும். 


எனவே இவ்வாறான நெருக்கடி நிறைந்த மிகவும் சிக்கலான பிரதேசங்களில் நுழைந்து குப்பைகளையும், கழிவுப்பொருட்களையும் அகற்றும் பணியானது வீட்டுக்குள் இருந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது போன்றதல்ல. 


ஒரு பொறுப்புள்ள கண்டி மாவட்ட எம்பியும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் அவர்களின் அழைப்பில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, மு. கா பிரதி தலைவர் ஹிஸ்புல்லாஹ் பின்பு உதுமான் எம்பி, மு.பா.உ நளீம் ஆகியோர் தலைமைகளில் கனரக வாகனங்களும், ஆளணிகளும் கிழக்கு  மாகாணத்தில் இருந்து வரவழைத்து தொடர் அர்ப்பணிப்பான வேலைக்கு பின்பு பெரும்பாலான கடினமான வேலைகள் முடிவடைந்ததுள்ளது.


துப்புரவு பணிகளில் நடைபெற்ற துயர சம்பவங்களை எழுத்தில் வடிக்க முடியாதது. 17 நாட்கள் தாண்டிய இந்த சுத்திகரிக்கும் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டு வருகின்ற நிலையில், கள நிலவரத்தை புரிந்துகொள்ளாமல் குறைகளை மாத்திரம் தேடிகிகொண்டு முகநூலில் வெளிப்படுத்துகின்றனர். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments