Breaking News

உங்கள் சார்பாகவே, அங்கு நாம் சென்றோம்.!

மூண்று மாடி உயரம் வரை சேற்று நீர். வாழ்நாள் முழுவதும் தேடிய அத்தனையும்  ஒட்டுமொத்தமாக சென்றுவிட்டது!


தங்களின் தேடல், நினைவுப் பொருட்கள், வரலாற்று ஆவணங்கள், தினமும் ஆசையாய் தொட்டு தழுவியவைகள், கற்றவைகள், உடுத்தவைகள், உண்பவைகள் அனைத்தும் தங்களின் வீடுகள், கடைகளுக்கு முன்னே மலையாய், கழிவாய் குவிந்துள்ளது!


கம்பளை,கெலிஓய பிரதேசங்களில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வியாபாரிகள் -

ஒற்றை இரவில் அத்தனையையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டனர்! 


வீடுகளை இழந்து - குடும்பங்கள், குழந்தைகள், வயோதிபர்கள்,நோயாளிகள்  தவிக்கின்றனர்!


இந்த நிலையிலும், இத்தனை இழப்பிலும் எமது பங்களிப்பு மிகவும் சிறியதே!


"அரசியல் காலம் வரட்டும், அரசியல் பேசுவோம்"


இப்போது-

அவர்களுக்காகவும், அவர்களின் மறு வாழ்வுக்காவும்,அவர்களின் தொழில் விருத்தி பெறவும் பிரார்த்திக்கின்றேன்,

நீங்களும் பிரார்த்தியுங்கள்!


#தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ. எல். எம். அதாவுல்லா!














No comments