முசல்பிட்டி பகுதியில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிழப்பு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி முசல்பிட்டி பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று குளியலறை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சமயம் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டி முசல்பிட்டி பகுதியில் குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.
பெற்றோர்கள் வீட்டில் இருந்த சமயம் குழந்தை குளிக்கும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தண்ணீர் நிரம்பிய பாத்திரத்துக்குள் முகம் குப்புற தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உமிழ்ந்த குழந்தை கற்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகள் கற்பிட்டி பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments