Breaking News

கற்பிட்டியின் வீதிகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீர்

டித்வா சூறாவளி மற்றும் கன மழையின் காரணமாக கற்பிட்டி பிரதேசத்தில் ஐம்பது வீதமான வீதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்பட்டது அதில் இன்னும் பல வீதிகள் பயணம் செய்ய முடியாத நிலைமை யே காணப்படுகின்றது அதற்கான காரணம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கற்பிட்டி பிரதேசத்தில் டித்வா சூறாவளி மற்றும் தொடர் கன மழை காரணமாக 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் 6836 குடும்பங்களைச் சேர்ந்த 24 886 பேர் பாதிக்கப்பட்டதுடன் கரம்பை மற்றும் சேத்தாப்புள்ள ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒவ்வொரு நபர் வீதம் இரண்டு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் இடர் அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.












No comments