தெஹியத்த கண்டி மக்களுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் உதவி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட தெஹியத்த கண்டி மக்களுக்கு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் ஒரு தொகை உடுப்புப் பொதிகளை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவரும் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் தலைவருமான எம்.எஸ்.எம். முபாறக்கினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டப்ளியூ. ஏ. கங்கா சாகரிக்கா தமயேந்தியிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் எஸார் மீராசாஹிப், பொருளாளர் ஏ.எம். சமீம், பிரதித் தலைவர் வைத்தியர் ஏ.எம்.மிஸ்பாஹ், ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் உதவித் தலைவரும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எம். சலீம் (ஷர்க்கி), நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.எல்.எம். இஸ்ஸதீன், பள்ளிவாசலின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றசீது ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கான அனுசரணையினை சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments