ஜிப்ரி ஹாஜியாரின் மனிதநேயம்; மக்கள் மனதில் என்றும் நினைவிருக்கும்..!
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் பல இடங்களில் மக்களின் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியது. வீடுகள் சேதமடைந்து, வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெறும் வழிகளும் தடைபட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஜிப்ரி ஹாஜியார் தனது ZAHARA FOUNDATION மூலமாக இன, மத வேறுபாடுகளுக்குப் பால் இல்லாமல் முழுமையான உதவிகளை வழங்கினார்.
பல மில்லியன் பெறுமதியான உணவு, உடைகள், மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார ஆதரவு நேரடியாக மக்களுக்கு சென்றடைந்தது. இதன் மூலம் எந்த பிரதேசமும் தவறாமல், எல்லா பாதிக்கப்பட்ட மக்களும் உதவியை பெற்றனர்.
ஜிப்ரி ஹாஜியார் தனது ZAHARA FOUNDATION மூலமாக வழங்கிய இந்த அர்ப்பணிப்பு மற்றும் உதவி இலங்கை மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய மனிதாபிமான சேவை, சமூக சேவைக்கான முன்மாதிரியாகும்.
அல்லாஹ் அவருக்கு சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கவும், அவரது முயற்சியை மேலும் வளமாக்கவும் பிரார்த்திக்கிறோம்.
எஸ். சினீஸ் கான்

No comments