Breaking News

ஹிஸ்புல்லாஹ்வின் மனிதாபிமான உதவியை கம்பளை சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்..! - ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் கம்பளை மக்கள்.

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளும் கம்பளை பிரதேசத்தை கடுமையாகப் பாதித்தன. வீடுகள் சேதமடைந்தன, சொத்துகள் இழந்தன, பல குடும்பங்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை முழுமையாக சீரழிந்த நிலையில் சந்தித்தன. 


இந்த கடினமான தருணத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தொலைவில் இருந்தபோதும், கம்பளை மக்களின் துயரத்தை உணர்ந்து, தாமதமின்றி மனிதாபிமான கைகளை நீட்டிய ஹிஸ்புல்லாஹ் அவர்களின் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவரது தலைமையில் காத்தான்குடி நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை குழுக்கள் சிறப்பு ஒருங்கிணைப்புடன் கம்பளை பிரதேசத்திற்கு சென்று, மிகப்பெரிய அளவில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


கம்பளை மக்களின் வாழ்வை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் இப்பணிகள் மக்களிடம் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் ஏற்படுத்தின. இரண்டு நகர சபைகளை ஒருங்கிணைத்து, மனிதாபிமான உணர்வோடு உதவியை அனுப்பிய ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இந்த செயல் சமூக சேவைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.


எந்தவொரு இன, மத வேறுபாடுகளையும் தாண்டி, மனிதாபிமானத்தின் பேரில் செய்த இந்த உதவி, ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பண்பையும், அவரது சேவை உணர்வையும் வெளிப்படுத்துகிறது.


பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய அணியினருக்கும் கம்பளை மக்கள் நன்றிகளை தெரிவிப்பதுடன், இந்த மனிதாபிமான உதவிகளை கம்பளை சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்கும் என தெரிவிக்கின்றனர்.


S Sinees Khan








No comments