Breaking News

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.


இந்த சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் இலங்கை முழுவதிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். 


இந்த நிகழ்வை நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமை தாங்கினார். 


இந்நிகழ்வில் புத்தளம் கிளையின் நிர்வாக இயக்குனர் செயித் அப்கர் தலைமையிலான சிப் அபகஸ் மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்த அடைவை பெற்றுள்ளனர்.


புத்தளம் கிளை மாணவர்களின் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை, துணை சபாநாயகரும் குழுக்களின் தலைவருமான டாக்டர் ரிஸ்வி சாலிஹ் அவர்கள், சிப் அபகஸ் புத்தளம் கிளை நிர்வாக இயக்குனர் சையத் அப்கர் முகமது மில்ஹான் அவர்களுக்கு வழங்கி வைத்தார். 


இந்த அங்கீகாரமானது போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சிறப்பை எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.








No comments