Breaking News

புத்தளம் மாநகர சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் 04 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மாநகர சபையாக மாற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கட்சி சபையில் அதிகாரத்தை நிலைநாட்டி ஆட்சி அமைத்தது.


அதன்படி, மேயர் (தேசிய மக்கள் சக்தியின்) எம். என். ரின்சாத் அகமது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை (11) தாக்கல் செய்தார்.


அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 07 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்துள்ளார் 


வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மேயர் சபையை 12 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.





No comments