புத்தளம் கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்யாலயத்தின் முன்னாள் அதிபருக்கான பிரியாவிடையும், புதிய அதிபர் கடமை ஏற்பும்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்யாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் இஸட். ஏ. சன்ஹீர் (கபூரி) கடந்த புதன்கிழமை (5) அதிபர் பணியிலிருந்து முன் பணி ஓய்வு பெற்று சென்றார்.
ஓய்வு பெற்று சென்ற அதிபர் அஷ்ஷெய்க் இஸட். ஏ. சன்ஹீர் (கபூரி )ஐ பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்
பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபர் கே.டீ ஹாரூன் ஐ வரவேற்க்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, முன்னாள் அதிபர் திரு. லெஸ்லி, புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம். எல். எம். றிபாய்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அன்றைய தினமே புதிய அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
.



















No comments