கடையாமோட்டை வட்டார பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி பேரவையின் தவிசாளர்கள் நியமனம்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கடையாமோட்டை வட்டாரத்துக்கான சமூக சக்தி (Prajashakthi) தவிசாளர் நியமனங்கள் செவ்வாய்க்கிழமை (4) வழங்கி வைக்கப்பட்டது.
கனமூலை வடக்கு கிராம சேவகர் பிரிவிற்கான தவிசாளராக திரு . ஏ.ஜீ. இருஷால் (MBA) மற்றும் கனமூலை தெற்கிற்கான தவிசாளராக திரு எம் எப் எம் ரமீஸ் (MBA) கடையாமோட்டை கிராம சேவகர் பிரிவிற்கான தவிசாளராக திரு எஸ் எம் எம் சுகூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கான நியமனங்கள் செவ்வாய்க்கிழமை (4) முந்தல் பிரதேச செயலகப் பிரிவு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானகமற்றும் புத்தளம்/கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் ஆகியோரின் தலைமையில் முந்தல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




No comments