Breaking News

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி குழுவின் தலைவர் கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலரை அணிவித்தார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட பாப்பி மலர் நினைவேந்தலுடன் இணைந்து, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி மலர் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு), செவ்வாய்க்கிழமை (04) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பாப்பி மலரை அணிவித்தார். 


முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது மற்றும் கடந்த முப்பது ஆண்டுகளாக தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த பாப்பி மலர் நினைவு தினம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


  போரின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து துணிச்சலான போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி குழுவின் தலைவர் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலரை அணிவித்தார்.


மேலும், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.









No comments