இலங்கை-சவூதி உறவின் ஆன்மீகப் பாலமாகத் திகழும் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!
✍️ எஸ். சினீஸ் கான்
இலங்கை மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கிடையேயான உறவு பல துறைகளில் நீண்டகாலமாக வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக கல்வி, சமய, கலாச்சாரம் மற்றும் மனிதநேயத் துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியை மூன்றாவது தடவையாக நடத்த தீர்மானித்துள்ளமை பெருமைக்குரியது.
இந்தப் போட்டி 2025 டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் சிறந்த குர்ஆன் மனன மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி, இஸ்லாமிய கல்வியையும், குர்ஆனின் புனித வசனங்களை மனனம் செய்தை ஊக்குவிக்கும் ஒரு உயர்ந்த மேடையாக அமையும்.
இந்த உயரிய முயற்சிக்கு பின்னணியில் நிற்பவர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள். அவரது அர்ப்பணிப்பு, மற்றும் இஸ்லாமிய கல்வி, கலாச்சார வளர்ச்சிக்கான அவரது ஆழ்ந்த அக்கறை, இலங்கையின் முஸ்லிம் சமூகத்தினரிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் இலங்கையில் தனது பதவிக்காலத்திலிருந்து இதுவரை பல மத, கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் வழிநடத்தும் சவூதி அரேபிய தூதரகம், இலங்கையின் இளைஞர்கள் மார்க்க கல்வியைப் பெறவும், குர்ஆன் மனனத்தில் திறம்பட விளங்கவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இது ஒரு ஆன்மீக விழிப்புணர்வின் திருவிழா. இளம் தலைமுறையினருக்கு அல்லாஹ்வின் வசனங்களை மனனம் செய்யும் ஊக்கத்தையும், அவர்களின் வாழ்வில் நற்குணம், இறையச்சச் மற்றும் ஒழுக்கத்தின் அடித்தளத்தையும் வலுப்படுத்துகிறது.
இலங்கையில் சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, இஸ்லாமிய பண்பாட்டின் ஒளியையும் பரப்பும் சிறந்த சேவையாகும். அவரின் தன்னலமற்ற பணிகள், இலங்கை-சவூதி உறவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாலமாக என்றும் நினைவுகூறப்படும்.



No comments