JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பள்ளியாவத்தை மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான விஷேட கலந்துரையாடல்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தின் பள்ளியாவத்தை வட்டாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான செயல் திட்டங்களை சமூக அபிவிருத்தி அமைப்பின் (சீ.ரீ.எப்) ஊடாக செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் முகத்துவாரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பள்ளியாவத்தை வட்டாரத்தின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றது.


மேற்படி கலந்துரையாடலில் சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் கே.எம் அஸ்ஹர், சமூக அபிவிருத்தி அமைப்பின் ஆலோசகரும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளருமான டப்யூ. பிரேமதாச, கற்பிட்டி பிரதேச கிராமிய அபிவிருத்தி குழுத் தலைவர் எம்.எஸ் ரனீஸ் மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் கணினி பிரிவு பொறுப்பாளர் எம்.எச்.எம் நப்ரிஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال