Breaking News

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஜனாதிபதி அவர்களின் "ரட்டம எக்கட்ட" விழிப்புணர்வு.

எம்.யூ.எம்.சனூன்

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் "ரட்டம எக்கட" போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான சத்திய பிரமாணம் எடுத்தல் நிகழ்வுகள் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் அண்மையில் (30) இடம்பெற்றது.


தேசிய ரீதியான இந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிபர் ஐ.ஏ. நஜீம் தலைமையில் கல்லூரி வளாகத்தில் பகுதி ரீதியாக நடைபெற்றன. 


இந்நிகழ்வுகளில் வளவாளர்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஏ.பி.ஜிப்னாஸ் மிஸ்பாஹியும், செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானியும் கலந்து சிறப்பித்து ஆன்மீக சொற்பொழிவும் மற்றும் சத்தியப்பிரமாணமும் மாணவர்களுக்கு மத்தியில் எடுத்துக்கொண்டனர்.


இந்நிகழ்வை மிக அழகான முறையில் ஏற்பாடு செய்த அதிபர் நஜீம், பகுதி பொறுப்பாசிரியர்களான ஆசிரியர் சைத், ஆசிரியர் ஆசாத், ஆசிரியர் சரீக் ஆகியோருக்கும், இதற்காக உதவி செய்த அத்தனை ஆசிரிய ஆசிரியைகளுக்கும் ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் கிளை தலைவர் அஷ்ஷேக் ஏ.பி.ஜிப்னாஸ் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த "ரட்டம எக்கட்ட" வேலை திட்டம் நாடு பூராகவும் வெற்றி பெறுவதற்கு இறைவனை வேண்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








No comments