கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவு நிகழ்வின் தொடரில் மாலுமிகளின் நட்பு ரீதியான ஒன்றுகூடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடற்படை மரபுகள் மற்றும் சர்வ மத மரபுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுகூடல் வெள்ளிக்கிழமை ( 07) வெலிசரவில் உள்ள ‘Wave N’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.
கடற்படையின் பெருமைமிகு 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுகூடலிர், அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் சேவையில் உள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகளுக்கு தங்கள் சேவை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்த்து.
இந்த நிகழ்வில் பேசிய கடற்படைத் தளபதி, 75 ஆண்டுகால கடற்படையின் நீண்ட பயணத்தில் பல்வேறு நேரங்களில் மாலுமிகளின் தொழில்முறை பங்களிப்பு கடற்படையின் படிப்படியான வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளதாகவும், அந்த நீண்ட பயணத்தில் தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த கடற்படையின் போர்வீரர்களை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் மேலும் கருத்துக்களை தெரிவித்த கடற்படைத் தளபதி, கடற்படை 75 ஆண்டுகளாக அர்ப்பணித்துக் கொண்டதைப் போலவே கடல்சார் பாதுகாப்புக்கும் தொடர்ந்து கடற்படையானது அர்ப்பணித்துக் கொள்ளும் என்றும், அதற்காக, ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமிகளின் அனுபவங்கள் ஒரு இளம் மாலுமி தனது கடமையை மிகவும் தரமான முறையில் செய்ய பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதில் கடற்படை குறிப்பாக சிறப்புப் பங்காற்றுகிறது என்றும் கூறினார்.
கடற்படை கலாச்சார இசைக்குழு மற்றும் நடனக் குழுவின் பாடல், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக்கப்பட்ட இந்த நட்புரீதியான ஒன்றுகூடலில், கடற்படை ஆண்டு நிறைவு தினத்தன்று வழங்கப்படும் பாரம்பரிய படாகானா உணவும் இடம்பெற்றது. நட்புரீதியான ஒன்றுகூடலில் பங்கேற்ற கடற்படை வீரர்களால் கடற்படை பாரம்பரியத்தின்படி நடத்தப்பட்டது.
மேலும், இந்த நட்புரீதியான ஒன்றுக்கூடலில் மாஸ்டர் சீப் பெடி ஒபிசர் ஏஎச்டி வீரதுங்க, ஓய்வுபெற்ற மூத்த மாலுமிகள் சார்பாக கடற்படை, மாஸ்டர் சீப் பெடி ஒபிசர் கேபி சமிந்த (ஓய்வு) மற்றும் பெண் சீப் பெடி ஒபிசர் எஸ்ஏடிஜேடி. சமரசிங்க (ஓய்வு) ஆகியோர் உரையாற்றினர்.
மேலும், கடற்படை தலைமை அதிகாரி உள்ளிட்ட கடற்படை மேலாண்மை வாரியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படைத் பிரதி தலைமை அதிகாரி, விநியோகம் மற்றும் சேவைகளின் பணிப்பாளர் நாயகம், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தன்னார்வ கடற்படையின் தளபதி உள்ளிட்ட கட்டளைத் தளபதிகள், கொடி அதிகாரிகள், இலங்கை கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல், கடற்படையின் மாஸ்டர் சீப் பெடி ஒபிசர், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் பெண் மாலுமிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.











No comments