Breaking News

கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் இடம்பெற்ற கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

2025 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை கடற்படையின்  75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை கொடிக்கு ஆசிர்வாதம் பெறும் கொடி ஆசீர்வாத பூஜை மற்றும் கஞ்சுக பூஜை மகோற்சவம் 2025 ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் புனித பூமியில் கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா பானகொடவும் கலந்து கொண்டார்.


இலங்கை கடற்படையின்  75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக கடற்படை பல மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.


இந் நிகழ்வின் பௌத்த சமய வழிபாடுகளை ஆரம்பிக்கும் வகையில் கடற்படைத் தளபதி  வியாழக்கிழமை (30 ) மாலை ருவன்வெளி சே விஹாரவாசி, மஹா பிரிவேனாவின் பிரதி பீடாதிபதி ராஜகீய பண்டிதர் வணக்கத்துக்குரிய குடாகல ஞானவிமல தேரரை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்ற பிறகு, கடற்படை பௌத்த சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கஞ்சுக பூஜை, பௌத்த மத நடைமுறைகளுக்கு இணங்க ருவன்வெளி மகா சேயவிற்கு முன்பாக நடைபெற்றது. அங்கு, கடற்படைத் தளபதி மற்றும் மூத்த அதிகாரிகளால் பௌத்தக் கொடி, அழகான ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது, அவ் கொடியானது ருவன்வெளி மகா சேயவை​ சுற்றி அணிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரால் கடற்படைத் தளபதிக்கும் முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்கள் தெரிவிக்கப்பட்டது. 


வெள்ளிக்கிழமை (31) காலை, கடற்படைக் கொடிகள் வண்ணமயமான ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஜய ஸ்ரீ மகா போதியின் ஆசிகளைப் பெறுவதற்காக ஜய ஸ்ரீ மகா போதி முன் வைக்கப்பட்டன. பின்னர், கடற்படைக் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெற பிரித் ஓதப்பட்டு, ஜய ஸ்ரீ மகா போதியின் ஆசிகள் பெற பிரார்த்தனை செய்யப்பட்டன. கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில், அட்டமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் தலைமையிலான வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரால், எழுபத்தைந்து (75) ஆண்டுகால கடற்படையின் நீண்ட வரலாற்றில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து துணிச்சலான கடற்படை போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர், மேலும் கடற்படைத் தளபதி உட்பட அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதங்களை வேண்டினர். 


கடற்படைத் தலைமை அதிகாரி, கடற்படை பிரதி தலைமை அதிகாரி, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவர், கடற்படை மேலாண்மை வாரியத்தின் மூத்த அதிகாரிகள், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி, கட்டளைத் தளபதிகள், இலங்கை கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல், கடற்படை சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், சிரேஷ்ட , கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகளும் இந்த மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.











No comments