Breaking News

கிழக்கின் முன்னணி நிறுவனமான Ultra Aluminium (Pvt) Ltd ன் தேசிய சாதனை.

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2025  *(Presidensial Enxvironment Award 2025 )* இல்  Ultra Aluminium (Pvt) Ltd நிறுவனம் பாரியளவிளான உற்பத்தி கைத்தொழில் நிறுவன வகுதிக்குள் (Industries - Large Scale) *தங்கப் பரிசு (Gold Award )* வென்றது. ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் *தங்கப் பரிசு (Gold Award)* பெற்றது என்பது ஒரு பெருமைக்குரிய தேசிய சாதனையாகும்.


இந்த விருது வழங்கும் விழா  23/10/2025 இன்று கொழும்பு  BMICH ல்  நடைபெற்றது. இலங்கை *ஜனாதிபதி மாண்புமிகு அனுரா குமார திசாநாயக்க* அவர்கள் இந்த மதிப்புமிக்க விருதை அல்ட்ரா அலுமினியம் நிறுவனத் தலைவர் திரு. *ஏ.எம். உனைஸ்* அவர்களுக்கு வழங்கினார்.


அல்ட்ரா அலுமினியம் நிறுவனம் தனது வணிகச் செயல்பாடுகளை 2022 ஆம் ஆண்டு தொடங்கி  வெறும் மூன்று ஆண்டுகளே கடந்த நிலையில் மிகவும் குறுகிய காலத்திற்குள் தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெற்றிருப்பது, நிறுவனத்தின் அதிவேக முன்னேற்றத்தையும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது.


இந்நிறுவனம் தனது செயல்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் திறமையை உறுதி செய்யும் வகையில் பல முக்கியமான சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. அவற்றில்  — ISO 9001:2015 Quality Management System (Dec 2024), ISO 14001:2015 Environmental Management System (July 2025) மற்றும் SLS சான்றிதழ் (September 2025) ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.


இவற்றுடன் சேர்த்து, ஜனாதிபதி சுற்றுச்சூழல் தங்கப் பரிசு 2025 பெற்றிருப்பது, அல்ட்ரா அலுமினியத்தின் நிலைத்த வளர்ச்சி மற்றும் புதுமை நோக்கில் எடுத்துக் கொண்ட உறுதியான முயற்சிகளுக்கான மேலும் ஒரு பெருமைமிகு சாதனையாகும்.


இவ்விருது தொடர்பாக அல்ட்ரா அலுமினியம் நிறுவனத் தலைவர் திரு. ஏ.எம். உனைஸ்,  பின்வருமாறு கூறினார்:

 

“இந்த Presidential Environment Gold Award பெற்றமை எங்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகும். இது தரம், பொறுப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் எங்கள் உறுதியைக் காட்டுகிறது. இந்த வெற்றியை எங்கள் முழு குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கே அர்ப்பணிக்கிறேன்.”


இச்சாதனை, திரு. ஏ.எம். உனைஸ் அவர்களின் தூரநோக்கு வழிநடத்தலின் கீழ், நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவும் பணியாளர்களும் இணைந்து செய்த தாராள முயற்சிகளின் விளைவாகும். இதன் மூலம் அல்ட்ரா அலுமினியம் நிறுவனம் தேசிய அளவிலான அங்கீகாரம் மற்றும் நிலைத்த வளர்ச்சியின் பாதையில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.







No comments