Breaking News

பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு பெருமை.

எம்.யூ.எம்.சனூன்

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களப் பேச்சுப் போட்டியில் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 07 ம் தர மாணவி நிம்சாத் ஹைக்கா நவால், மாகாண மட்டத்தில் முதல் இடத்தை பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் எஸ்.எச்.எம்.அஸான் தெரிவித்துள்ளார்.


இந்த சிறப்பான சாதனைக்காக மாணவிக்கு வழிகாட்டியாக செயற்பட்டு பயிற்சி வழங்கிய ஆசிரியை எம்.ஆர்.எஸ்.ஸஹிய்யாவின் பங்களிப்பு அளப்பரியதொன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இம்மாதிரியான சாதனைகள், மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதோடு கல்வி துறையின் வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமாகும் என பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.




No comments