Breaking News

கற்பிட்டி ஜூனியர் லீக் இரண்டாவது முறையாகவும் மாணவர்களுக்கிடையிலான காற்பந்து சுற்றுப் போட்டித் தொடர் ஆரம்பம்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஜூனியர் லீக்  இரண்டாவது முறையாகவும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கிடையிலான லீக் முறையில் இடம்பெறும் காற்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர்  வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன்  ஞாயிறு வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெற உள்ளது.


பாடசாலை மாணவர்கள் ஏல அடிப்படையில் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்


அதன்படி எஸ்.எம் இக்பால் அனுசரணையின் கீழ்

லண்டன் எப்.சீ அணியும், எச்.எல்.எம் நஜாத் அணுசரனையில்

கற்பிட்டி யுனைட்டட் அணியும்  எம்.என்.எம் முஆத் அணுசரனையில்

பூம்ஸ் அணியும் ராஜா அணுசரனையில் டீரீம்ஸ் அணியும், எம்.டி.எம் பஸாஜ் அணுசரனையில் 

அக்ஸையன் அணியும் எம்.நூமான் அணுசரனையில் 

மெட்ரீட் அணியும் இச் சுற்றுப் போட்டித் தொடரில் கலந்து கொள்கின்றது.


மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இச் சுற்றுப் போட்டி தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எஸ்.எம் இக்பால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது









No comments