Breaking News

புத்தளம், செம்புகுளிய குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்க்க கடற்படை சுழியோடிகள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம், மஹகும்புக்கடவல, செம்புக்குளிய குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்த்து புனரமைப்பதற்காக கடற்படையினரின் சுழியோடிகள் உதவியை வழங்கியது.


செம்புகுளிய குளத்தில் பழுதடைந்த மதகை ஆய்வு செய்து சரிசெய்ய கடற்படை சுழியோடிகளிடம் உதவி கோரியதற்கு கடற்படை உடனடியாக பதிலளித்து, மேலும் வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து ஒரு சுழியோடிகுழு உதவுவதற்காக அனுப்பப்பட்டது.


அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இயக்கப்பட்ட, கடற்படை சுழியோடி குழுவின் மூலம் பாழடைந்த மதகு வாயில் மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டை மீட்டெடுப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments