Breaking News

மு.கா. அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முழக்கம் மஜீதின் புதல்வர் ஹக்கானி நியமனம்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்திற்கான இளைஞர் அமைப்பாளராக - கட்சியின் தவிசாளராக பணியாற்றிய மர்ஹூம் முழக்கம் அப்துல் மஜீட் அவர்களின் புதல்வர் ஏ.எஸ். ஹக்கானி மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.


மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் நிகழ்வொன்றின்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான றஊப் ஹக்கீம் அவர்களினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் எம்.பியுமான எஸ்.எம்.எம். முஷாரப், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், மருதமுனை அமைப்பாளர் தாஜுதீன் மற்றும் கட்சி உயர்பீட உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




No comments