வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரல் நிகழ்வில் எக்ஸத் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் ஜெ.எல்.எம். ஷாஜஹானின் தலைமை உரை/
இன்று நாம் வட மாகாண முஸ்லிம் மக்கள், தமிழைப் பேசினாலும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதற்காக இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் அரசியல் வலியை உணர்வதற்காகவும் அந்த மக்களுடன் அரசியல் சமூக ரீதியாக இணைந்திருக்கிறோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவும் எக்ஸத் ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் கூடியிருக்கின்றோம்!
வட மாகாண முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காக பலாத்காரத்தைப் பயன்படுத்தி இன் சுத்திகரிப்பு செய்யப்பட்டது தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் வடிவமாகும்!சர்வதேச இந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்திய பங்களிப்பையே பாசிஸ புலிகள் செய்திருந்தனர்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பாசிச புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சாதாரண இடப் பெயர்வு அல்ல இது என்பதையே வருடாந்தம் எங்காவது ஒரு மூலையில் முஸ்லிம் சமூகமாக ஒன்று கூடி உலகிற்கு உரத்துச் சொல்கின்றோம்!
புலித் தேசியவாதிகளும் தமிழ் தலைவர்களும் வட மாகாண முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்ததற்கு கூறும் காரணம் தமிழ் தேசிய போராட்டத்தை சிறீலங்கா இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தார்கள் என்ற அப்பட்டமான பொய்யை இதுவரையிலும் எவ்விதமான கூச்சமும் இன்றி கூறிவருகிறார்கள்!
ஓரிரு முஸ்லிம் வர்த்தகர்கள் தமிழர்களுக்கு உணவு கொண்டு போய் கொடுப்பதற்காக இராணுவத்துடன் தொடர்பில் இருந்ததற்காக முழு முஸ்லிம்களையும் பலாத்கார வெளியேற்ற முடியும் என்றால் ஏன்?இராணுவத்துடன் தொடர்பாக இருந்த தமிழர் இயக்கங்களான EPRLF PLOT TELO வுக்கு முழு தமிழர்களையும் வெளியேற்றவில்லை!என்ற கேள்விக்கு இங்கு பதில் சொல்ல எந்த தமிழ் தலைவர்களும் தயாராக இல்லை!
வட மாகாண முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ததற்காக புலிகளின் பினாமிகளாக தங்களை உரிமை கோரும் தமிழ் தேசிய தலைமைகள் இதுவரையிலும் அரசியல் ரீதியாக மன்னிப்பு கோரவில்லையென்பதையும் இங்கு கூடியிருக்கின்ற நாம் சர்வதேசத்திற்கு சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!
பாஸிஸ யூத வெறி பிடித்த இஸ்ரேலியர்கள் கூட தமது ஆட்சிப்பரப்புக்குள் வாழும் அரபு மக்களை அரபுக்கள் என்பதற்காக இனச் சுத்திகரிப்பு செய்யவில்லையென்பதையும், ஆனால் ஒரு அரசாக இல்லாத பாஸிஸப் புலிகள் முஸ்லிம்கள் என்பதற்காக இனச் சுத்திகரிப்பு செய்தார்கள் என்பதையும் இங்கு கூடியிருக்கின்ற நாம் உலகிற்கு சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!
சிறீலங்கா இராணுவம் ஒரு அரசாங்கத்தின் இராணுவமாக தமது மக்களை காப்பாற்றும்,பாதுகாக்கும் கடமையை செய்துள்ளதை இங்கு கூடியிருக்கும் நாம் பாராட்ட வேண்டும்!இராணுவ சேவைக்காக தம்மை அர்ப்பணித்த எமது இன முஸ்லிம் சகோதரர்களையும் சிங்கள சகோதரர்களையும் வரலாறு நெடுக நாம் முஸ்லிம் சமூகமாக நன்றி கூறுவதோடு அவர்களின் பங்களிப்பை போற்றிப் புகழ வேண்டும் !
இந்த பாஸிச இனச்சுத்திகரிப்பை உலக மயப்படுத்த இங்கே வருகை தந்திருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கு எமது சமூகம் சார்பாக எக்ஸத் ஊடக குழுமம் தமது நன்றிகளை அவர்களின் பாதங்களில் சமர்ப்பிப்பதோடு என்றும் இந்த இராணுவம் செய்த உதவிகளுக்காக நாம் நன்றியுடன் இருப்போம் எனக் கூறி எனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

No comments