உடப்பு ஆண்டிமுனை வெங்கடேஷ்வரா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு
(உடப்பு க.மகாதேவன்)
உடப்பு ஆண்டிமுனையிலுள்ள ‘ஶ்ரீவெங்கடேஸ்வரா’ பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் தின நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர்கள் திருமதி. முகுந்தினி, திருமதி.எஸ். கிஷோதினி ஆகியோர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்பள்ளி பாலர் பாடசாலைக்குப் பொறுப்பான அதிகாரி திருமதி.ரூபிகா டயமகள் கலந்து கொண்டதோடு, ஓய்வுநிலை அதிபர் திரு.க.தொண்டமான், ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்பப்பாடசாலை அதிபர் திரு.எஸ். கோகிலகாந்தன், ஓய்வு நிலை ஆசிரியர் திரு.க. மகாதேவன், வெங்கடேஷ்வரா மீன்பிடிச்சங்கத் தலைவர் திரு. கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments