சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அமேசன் உயர் கல்வி நிறுவனத்தினர் அனாதை இல்லத்திற்கு வருகை.
எம்.யூ.எம்.சனூன்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அமேசன் உயர்கல்வி நிறுவனத்தினர் அங்கொடையில் அமைந்துள்ள அஷ் ஷிஃபா அனாதை இல்லத்தின் விஷேட பிரிவினர் பகுதிக்கு விஜயம் செய்தனர்.
அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகளும், மாணவர்களும் இந்த சிறுவர்களோடு இணைந்து முழு நாளையும் அவர்களுடன் சந்தோஷமாக கழித்தனர்.
விஷேட பிரிவு மாணவர்களுக்கு பல போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்தி பரிசில்களும், பகல் உணவும் வழங்கினர்.
இந்த சமூக அபிவிருத்தி திட்டம் அமேசன் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்க்காரின் வழிகாட்டலில், மாணவர் குழு தலைவர் ஹஸ்ஸான் இர்பான் தலைமையில், அமேசன் கல்லூரியின் முழு அனுசரனையுடன் சிறப்பாக நடாத்தப்பட்டது.
No comments