Breaking News

புத்தளம் நல்லாந்தழுவையில் மன்சூர் அகடமி திறந்து வைப்பு

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் நல்லாந்தழுவையில் முதன்முறையாக மேலதிக வகுப்புக்களுக்கான கல்வி நிலையமாக மன்சூர் அகடமி (Mansoor Academy) அதன் ஸ்தாபகர் பீர் முகம்மது மன்சூர் தலைமையில் சனிக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா, நல்லாந்தழுவை பாடசாலையின் முன்னாள் அதிபர் ஓய்வு பெற்ற என். எம். எம். நஜீப் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்


இம் மன்சூர் அகடமியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2026 ம் ஆண்டின் தரம் 06 தொடக்கம் க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கும் க.பொ.த  உயர் தரத்தின் கலைப் பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் அகடமியின் நிர்வாகப் பணிப்பாளர்  மன்சூர் அஹமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















No comments