Breaking News

கற்பிட்டி புதுக்குடியிருப்பு ஹுதா நகர் பாலர் பாடசாலையை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி புதுக்குடியிருப்பு  ஹுதா நகரின் பாலர் பாடசாலை கடந்த பல வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் புதுக்குடியிருப்பு முஸ்லிம் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து எதிர்வரும் 2026 ஜனவரி முதல்  ஹுதா நகர் பாலர் பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் பாலர் பாடசாலை கட்டிடத்தில் ஹுதா நகர் மகளிர் பிரிவின் தலைவி றைஸா தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில், முஸ்லிம் காங்கிரஸின் கற்பிட்டி யின் உயர்பீட உறுப்பினர் எம்.ஆர்.றஸ்மி. அல் மனார் பாடசாலையின் ஆசிரியர் என்.பி.எம் நவாஸ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் அஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் கல்வி கண்ணாக காணப்படும் இந்த பாலர் பாடசாலை பல வருடங்களாக மூடப்பட்டுள்ளமை கவலை தரும் விடயமாக காணப்படுவதாக தெரிவித்ததுடன் இந்த ஹுதா நகர் பாலர் பாடசாலையை உடனடியாக எதிர்வரும் 2026 ம் ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் திறப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் இப்பாலர் பாடசாலையில் 2026 ஜனவரியில் புதிதாக இணையும் சகல மாணவர்களுக்குமான பாடசாலை உபகரணங்கள் புத்தக பை மற்றும் சீருடை துணிகள் என்பவற்றை தான் இலவசமாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments