Breaking News

ஊடகவியலாளர்களுக்கான இலவச கண் மருத்துவ முகாம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையும் இணைந்து மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை என்ற தொனிப்பொருளில்  கண் தொடர்பான தகவல்களை சமுகமயமாக்கும் மகத்தான பணியை மேற்க் கொண்டு வரும் ஊடகவியலாளர்களுக்கான இலவச கண் மருத்துவ முகாம் ஒன்றை எதிர்வரும் 2025 நவம்பர் மாதம் 01 ம் திகதி சனிக்கிழமை காலை 08 மணி முதல் 01 மணி வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அன்றைய இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்படுவதுடன் இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச் எஸ் கே ஜே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments