புத்தளம் தில்லையடி ஒஸ்மானியா பாலர் பாடசாலைக்கு குடிநீர் வசதி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தில்லையடி தாயிப் நகரில் அமைந்துள்ள ஒஸ்மானியா பாலர் பாடசாலைக்கு நீண்டகாலமாக தேவையாக இருந்த குடிநீர் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.
இத்திட்டம் YWMA Sri Lanka அமைப்பின் அனுசரணையுடன், இணைப்பாளர் முஜாஹித் நிசாரின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுடின் சமூகப்பணியாளர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



No comments